ADDED : பிப் 25, 2025 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு,: பெங்களூரில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு, நாளை விலங்குகளை வெட்டுவதற்கும், இறைச்சி விற்பனைக்கும் பெங்களூரு மாநகராட்சி தடை விதித்து உள்ளது.
மஹா சிவராத்திரி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது.
இப்பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் பெங்களூரில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மஹா சிவராத்திரி அன்று பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்வர்.
எனவே, இந்த நாளில் பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு, கோழி வெட்டுவதற்கும்; இறைச்சி விற்பனை செய்வதற்கும் தடை செய்யப்பட்டு உள்ளது.
இதை மீறி, செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
எலஹங்காவில் நடந்த ஏரோ இந்தியா விமான கண்காட்சியின் போது, குறிப்பிட்ட பகுதியில் மட்டும் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.