sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அ.தி.மு.க.,வுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்: உதயநிதி விருப்பம்

/

அ.தி.மு.க.,வுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்: உதயநிதி விருப்பம்

அ.தி.மு.க.,வுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்: உதயநிதி விருப்பம்

அ.தி.மு.க.,வுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்: உதயநிதி விருப்பம்

13


ADDED : ஏப் 02, 2024 01:28 PM

Google News

ADDED : ஏப் 02, 2024 01:28 PM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'மத்திய அரசிடம் தமிழக உரிமைகளை அடகு வைத்த அதிமுக அரசுக்கு இந்த தேர்தலில் பொதுமக்கள் பாடம் புகட்ட வேண்டும்' என அமைச்சர் உதயநிதி கூறினார்.

சென்னை மாதவரம் பகுதியில் வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது உதயநிதி பேசியதாவது: சசிகலா காலை பிடித்து முதல்வர் ஆன இ.பி.எஸ்., பின்னர் அவரது காலையே வாரிவிட்டார். அதானியின் நலனுக்காக நாடு நாடாகச் சுற்றும் நீங்கள் எங்கள் மீனவர்களின் நலனுக்காக எத்தனை முறை இலங்கைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினீர்கள்.

லோக்சபா தேர்தலில் உதயசூரியனுக்கு அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் பிரதமர் மோடிக்கு வைக்கும் வேட்டு. மத்திய அரசிடம் தமிழக உரிமைகளை அடகு வைத்த அதிமுக அரசுக்கு இந்த தேர்தலில் பொதுமக்கள் பாடம் புகட்ட வேண்டும். அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் கலாநிதி வீராசாமியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். கலாநிதி வீராசாமியை எதிர்த்து போட்டியிடுபவர்களை டெபாசிட் இழக்கச் செய்யவேண்டும்.

வட சென்னை அனல் மின் நிலையத்தில் ரூ.6,300 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் முடிந்ததும் வீட்டுமனை பெற்றவர்களுக்கு பட்டா வழங்கப்படும். சட்டசபை தேர்தலில், ஒட்டுமொத்த சென்னையும், திமுகவுக்கு ஓட்டளித்தது. கருணாநிதியை போலவே, சொன்னதை தான் செய்வார், செய்வதை தான் சொல்வார் முதல்வர் ஸ்டாலின். வட சென்னை கணேசபுரத்தில் ரயில்வே மேம்பால பணிகள் விரைவில் முடிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us