தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ 2ம் கட்ட தேர்தலுக்கு மனு தாக்கல் நிறைவு

2ம் கட்ட தேர்தலுக்கு மனு தாக்கல் நிறைவு

2ம் கட்ட தேர்தலுக்கு மனு தாக்கல் நிறைவு


ADDED : ஏப் 20, 2024 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2024 05:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு, : கர்நாடகாவில், இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் 14 தொகுதிகளில் மொத்தம், 337 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். இன்று மனுக்கள் பரிசீலனை நடக்கிறது.

கர்நாடகாவில், இரண்டாம் கட்டமாக, சிக்கோடி, பெலகாவி, பாகல்கோட், விஜயபுரா - தனி, கலபுரகி - தனி, ராய்ச்சூர் - எஸ்.டி., பீதர், கொப்பால், பல்லாரி - எஸ்.டி., ஹாவேரி, தார்வாட், உத்தர கன்னடா, தாவணகெரே, ஷிவமொகா ஆகிய 14 தொகுதிகளுக்கு, மே 7ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது.

இந்த தொகுதிகளுக்கு, கடந்த 12ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கியது. மனு தாக்கலுக்கு நேற்று கடைசி நாள். நேற்று வரை ஆண்கள் 309, பெண்கள் 28 என மொத்தம் 337 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

முன்னாள் முதல்வரும், ஹாவேரி பா.ஜ., வேட்பாளருமான பசவராஜ் பொம்மை, ஏராளமான தொண்டர்களுடன் பேரணியாக வந்து, வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மத்திய பார்லிமென்ட் விவகார துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, தற்போதைய எம்.பி., சிவகுமார் உதாசி, முன்னாள் அமைச்சர்கள் பி.சி.பாட்டீல், சி.சி.பாட்டீல் உட்பட பல தலைவர்கள் பங்கேற்றனர்.

பசவராஜ் பொம்மை, ஏற்கனவே பெயரளவுக்கு மனு தாக்கல் செய்த நிலையில், நேற்று தன் பலத்தை நிரூபிப்பதற்காக பேரணியாக வந்து இரண்டாம் முறை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்று, கடைசி நாளான நேற்று பல்வேறு வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இன்று மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. மனுக்கள் திரும்ப பெறுவதற்கு வரும் 22ம் தேதி கடைசி நாள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us