ADDED : மார் 08, 2025 02:20 AM

பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் திறன் மேம்பாட்டிற்காக துவங்கப்பட்ட முதல் திட்டமான சக்தி திட்டத்திற்கு, 5,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையம், பொது -தனியார் கூட்டுடன், 'புராஜெக்ட் மெஜஸ்டிக் திட்டத்'தின் கீழ் மறுவடிவமைப்பு செய்யப்படும்.
ஹொன்னாவர், சாம்ராஜ்நகர், சித்ரதுர்காவில் 20 கோடி ரூபாயில், தானியங்கி சோதனை ஓட்டுநர் பாதைகள் கட்டப்படும். முதற்கட்டமாக, 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு
ஐந்து மண்டல போக்குவரத்து அலுவலகங்கள், 25 கோடி ரூபாயில் டிஜிட்டல் மயம்.
போக்குவரத்து விதிமீறல்களை கண்கண்காணிக்க தாவணகெரே, தார்வாட், கலபுரகி, பெலகாவி, சித்ரதுர்கா, ஹாவேரி, விஜயநகராவின் ஹொஸ்பெட், பல்லாரி, விஜயபுரா, தட்சிண கன்னட மாவட்டங்களில் 50 கோடி ரூபாயில், 'ஏ.ஐ.,' கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும்.
நடப்பு 2025 - -26 ஆண்டில், 14,750 புதிய மின்சார வாகனங்கள் வாங்கப்படும். இதில், 9,000 பஸ்கள், பி.எம்.டி.சி.,க்கு வழங்கப்படும்.
நான்கு போக்குவரத்து கழகங்களை நிதி ரீதியில் பலப்படுத்த, 2,000 கோடி ரூபாய் கடன் வாங்க அரசு ஒப்புதல்.
பெங்களூரு கிழக்கு மண்டலத்தில் உள்ள கே.ஆர்.புரத்தில் பொது தனியார் கூட்டுடன், புதிய சாட்டிலைட் பஸ் நிலையம் கட்டப்படும்.
மைசூரில் உள்ள பன்னி மண்டபத்தில் 120 கோடி ரூபாயில் அதிநவீன பேருந்து நிலையம்.