தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ விமானத்தில் திடீர் தீ: 179 பயணியர் தப்பினர்

விமானத்தில் திடீர் தீ: 179 பயணியர் தப்பினர்

விமானத்தில் திடீர் தீ: 179 பயணியர் தப்பினர்


ADDED : மே 19, 2024 11:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2024 11:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில் இருந்து கொச்சிக்கு 179 பயணியருடன் புறப்பட்ட, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் இன்ஜினில் தீ பற்றியதால், நேற்று அவசரமாக பெங்களூரில் தரையிறக்கப்பட்டது.

சமீப நாட்களாக உள்நாட்டு விமானங்கள் சில தொழில்நுட்ப கோளாறு மற்றும் விபத்து காரணமாக ரத்தாவது மற்றும் அவசரமாக தரையிறக்கப்படுவது நடக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த வாரத்தில் மட்டும் இது போன்று மூன்று உள்நாட்டு விமானங்கள் ரத்தாகி உள்ளன.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் விமானம், கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கொச்சிக்கு புறப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் விமானத்தின் வலது பக்க இன்ஜினில் தீ பற்றியது.

இதையறிந்த பயணியர் அலறினர். உடனடியாக விமான பைலட், முழு அவசரநிலை அறிவித்து, பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில், விமானத்தை மீண்டும் அவசரமாக தரையிறக்கினர்.

அதிலிருந்த 179 பயணியர் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த ஏர் இந்தியா நிறுவனம், பயணியருக்கு மாற்று ஏற்பாடு செய்து தந்ததாக கூறியுள்ளது.

இன்ஜினில் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து கண்டறிய, விமான போக்குவரத்து ஆணையம் விசாரணையை துவக்கியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us