ADDED : ஏப் 18, 2024 04:20 AM

துமகூரு, :  ''ராகுலை விமர்சிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி மும்முரமாக உள்ளார்,'' என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறி உள்ளார்.
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் துமகூரில் நேற்று அளித்த பேட்டி:
தனியார் செய்தி நிறுவனத்திற்கு, பிரதமர் மோடி அளித்த பேட்டியில் 80 நிமிடங்கள் பேசிஉள்ளார்.
இதில் 38 முறை ராகுல், 68 முறை காங்கிரஸ் கட்சி பெயரையும் குறிப்பிட்டு பேசி உள்ளார். ராகுலை விமர்சிப்பதில் மட்டும் தான் பிரதமர் மும்முரமாக உள்ளார்.
மக்கள் பிரச்னைகள், விவசாயிகள் படும் கஷ்டம் பற்றி, அவர் வாயில் இருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை. ஊழலை பற்றி பேச, பிரதமர் மோடிக்கு உரிமை இல்லை.
கொரோனா நேரத்தில் கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த பா.ஜ., மருத்துவ உபகரணங்களை கூடுதல் விலைக்கு வாங்கியது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, தொழில் அதிபர் அதானியின் நிறுவன வருவாய் 25,000 கோடி ரூபாய். ஆனால் இப்போது 7.50 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது.
மோடியின் உதவியால் பணக்காரர்கள், பெரும் பணக்காரர்களாக மாறி உள்ளனர்.
காங்கிரஸ் கொள்கை, கோட்பாடு ஒரு போதும் மாறவில்லை.
ஏழைகள், சிறுபான்மையினர், தலித், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக உள்ளோம். கொல்லர் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வாங்கித் தர, காங்கிரஸ் அரசு முயற்சி செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.

