பா.ஜ.,ஆளும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
பா.ஜ.,ஆளும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
UPDATED : ஜூலை 27, 2024 07:42 PM
ADDED : ஜூலை 27, 2024 07:15 PM

புதுடில்லி: கட்சி தலைமை அலுவலகத்தில் பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் வகையில் திட்டக்கமிஷனுக்கு மாற்றாக நிடிஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலங்களுக்கான நிதி பகிர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
கூட்டம் நிறைவடைந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை டில்லியில் பா.ஜ. தலைமை அலுவலகம் வந்தார். அவருடன் மத்திய நிதி அமைச்சர் அமித்ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்ட பா.ஜ. நிர்வாகிகள் வந்தனர். இக்கூட்டத்தில் பா.ஜ. ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.