வைரத்தில் பிரதமர் மோடியின் படம்: சூரத் கைவினை கலைஞர்கள் அசத்தல்
வைரத்தில் பிரதமர் மோடியின் படம்: சூரத் கைவினை கலைஞர்கள் அசத்தல்
ADDED : ஜூலை 14, 2024 12:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆமதாபாத்: குஜராத் மாநிலம் சூரத்தில் 8 காரட் வைரத்தில், பிரதமர் மோடியின் படத்தை வடிவமைத்து 20 கைவினை கலைஞர்கள் அசத்தி உள்ளனர்.
குஜராத் மாநிலம் சூரத்தில் வைரம் தயாரிக்கும் நிறுவனத்தை சேர்ந்த கைவினை கலைஞர்கள், பிரதமர் மோடியின் படத்தை வைரத்தில் வடிவமைக்க திட்டமிட்டுள்ளனர்.
20 பேர் இணைந்து ஒரு மாதத்திற்கு மேல் வேலை பார்த்தனர். ஆரம்பத்தில் 40 காரட் வைரத்தில் பிரதமர் மோடியின் படத்தை வடிவமைத்துள்ளனர்.
வடிவத்திற்காக வெட்டப்பட்டு, மெருகூட்டப்பட்ட பிறகு, அதன் அளவு 8 காரட்டாக குறைந்தது. இந்த 8 காரட் வைரம், கண்காட்சியில் வைக்கப்பட்டது. கண்காட்சியை குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி பார்வையிட்டார். வைரத்தில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்று இருப்பது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.