'பிரதமர் மோடி கூறுவதை பா.ஜ.,வினர் தம்பட்டம் அடிப்பர்'
'பிரதமர் மோடி கூறுவதை பா.ஜ.,வினர் தம்பட்டம் அடிப்பர்'
ADDED : மார் 30, 2024 02:50 AM

ராம்நகர்: “பிரதமர் நரேந்திர மோடி, காகம் வெண்மையாக உள்ளது என்றால், பா.ஜ.,வினர் ஆமாம் என்பர். நாய்க்கு வால் இல்லை என்றால், ஆமாம் வால் இல்லை என்பர்,” என, முதல்வர் சித்தராமையா குற்றஞ்சாட்டினார்.
ராம்நகரில் நேற்று அவர் கூறியதாவது:
மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். 2023 - 24ம் ஆண்டு பட்ஜெட்டில், என்ன கூறினீர்கள்? பத்ரா மேலணை திட்டத்துக்கு, மத்திய அரசு சார்பில் 5,300 கோடி ரூபாய் கொடுப்பதாக கூறினீர்கள்.
நடப்பு நிதியாண்டு முடியும் நிலையில், ஒரு ரூபாயும் வரவில்லை. இது உண்மையா, பொய்யா என கூறுங்கள். பிரதமர் நரேந்திர மோடியும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் பொய்க்காரர்கள். மேகதாது அணை கட்டும் விஷயத்திலும், பா.ஜ., - ம.ஜ.த.,வினர் பொய் சொல்கின்றனர். அவர்கள் எப்போதும் சொன்னபடி நடந்து கொண்டதில்லை. அவர்கள் சொல்வதை நம்பினால், மோசம் போவோம்.
பிரதமர் நரேந்திர மோடி, காகம் வெண்மையாக உள்ளது என்றால், பா.ஜ.,வினர் ஆமாம் என்பர். நாய்க்கு வால் இல்லை என்றால், ஆமாம் வால் இல்லை என்பர். பிரதமர் என்ன சொல்கிறாரோ, அதை தம்பட்டம் அடிப்பதே பா.ஜ.,வினர் பழக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.

