ADDED : ஜூன் 13, 2024 05:35 PM
ஞானபாரதி:
பெங்களூரில் ஆயுதங்களால் தாக்கி ரவுடி கொலை செய்யப்பட்டார்.
பெங்களூரு ஞானபாரதி அருகே அஞ்சே பாளையா கிராமம் வழியாக செல்லும், ரயில்வே தண்டவாளம் அருகே நேற்று காலை ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் ஞானபாரதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
விசாரணையில், கொலையானவர் அஞ்சே பாளையா கிராமத்தின் நாகா, 42 என்பது தெரிந்தது. ரவுடியான இவர் மீது கெங்கேரி, ஞானபாரதி போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நாகாவை, மர்ம நபர்கள் ஆயுதங்களால் தாக்கி கொன்றது தெரிந்தது. அவரை கொன்றவர்கள் யார், என்ன காரணம் என்று தெரியவில்லை. முன்விரோதத்தில் எதிர்கோஷ்டியை சேர்ந்த ரவுடி கும்பல் கொன்று இருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த கோணத்தில் ஞானபாரதி போலீசார் விசாரிக்கின்றனர்.
***