ADDED : மே 01, 2024 11:41 PM
குருகிராம்:புதுடில்லி அருகே, குருகிராம் 74வது செக்டாரில் வசிப்பவர் நிஷா சவுத்ரி,38. இவர், சாகேத் அடுக்குமாடி குடியிருப்பில், கரண் சேத் என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வசிக்கிறார். குருகிராம் கெர்கி தவுலா போலீசில் நிஷா கொடுத்துள்ள புகார்:
கடந்த ஏப்ரல் 21ம் தேதி நானும் கரண் சேத்தும் ஒரு மாலுக்கு இரவு உணவுக்குச் சென்றோம். அங்கு ஒரு கடையில் பீட்சா ஆர்டர் செய்தோம். அதற்காக காத்திருந்தபோது, எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
திடீரென ஆத்திரம் அடைந்த கரண், என்னை கண்மூடித்தனமாக அடித்தார். மேலும், போன் செய்து அவருடைய நண்பரும் ஜிம் பயிற்சியாளருமான விஷாலை அழைத்தார்.
அவர் வந்தவுடன் இருவரும் சேர்ந்து என்னை சரமாரியாகத் தாக்கினர். இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி, காரில் ஏற்றிச் சென்று வீட்டில் இறக்கி விட்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கரண் சேத் மற்றும் விஷால் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் இருவரையும் தேடுகின்றனர்.

