ADDED : ஜூன் 04, 2024 04:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெலகாவி, பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, பெலகாவியில் நேற்று கூறியதாவது:
சில கருத்து கணிப்புகள், காங்கிரஸ் வெற்றி பெறும் என, கூறுகின்றன. சில அமைப்புகளின் கருத்து கணிப்பு, பா.ஜ., வெற்றி பெறும் என, கூறுகின்றன. சமூக வலைதளங்களிலும், இண்டியா கூட்டணி வெற்றி பெறும் என, கூறுகிறது.
இத்தகைய கருத்து கணிப்புகள், மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. நாளை (இன்று) குழப்பம் முடிவுக்கு வரும். கருத்து கணிப்புகள், மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தாது. ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே, தங்கள் முடிவை தெரிவித்து விட்டனர். அது மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பத்திரமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.