குளிர்காலத்தில் அதிகரிக்கும் மாசு 35 துறைகளுடன் ஆலோசனை
குளிர்காலத்தில் அதிகரிக்கும் மாசு 35 துறைகளுடன் ஆலோசனை
ADDED : செப் 05, 2024 09:09 PM
புதுடில்லி,:“குளிர்காலத்தில் அதிகரிக்கும் காற்று மாசைக் கட்டுப்படுத்த 21 அம்ச செயல் திட்டம் அமல்படுத்தப்படும்,” என, சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் கூறினார்.
டில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு, மாநகரப் போலீஸ், டில்லி போக்குவரத்துக் கழகம், பொதுப்பணித் துறை, டில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் உட்பட 35 முக்கியத் துறைகளுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இந்த ஆண்டு குளிர்காலத்தில் அதிகரிக்கும் காற்று மாசைக் கட்டுக்குள் கொண்டுவர விரிவான திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பின், அமைச்சர் கோபால் ராய் நேற்று கூறியதாவது:
குளிர் காலத்தில் டில்லி மற்றும் புறநகரில் மாசு அளவு உச்சத்துக்கு செல்லும். இந்த ஆண்டு காற்று மாசைக் கட்டுப்பட்டுத்த 21 அம்ச குளிர்கால செயல் திட்டம் அமல்படுத்தப்படும். கடந்த ஆண்டு, காற்று மாசுபாட்டைக் குறைக்க 15 அம்ச செயல்திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதேநேரத்தில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம ஆத்மி அரசு பதவி ஏற்றதில் இருந்தே ஆண்டுக்கு ஆண்டு காற்று மாசு கணிசமாக குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.