ADDED : ஆக 28, 2024 07:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:மருத்துவக் கல்லூரி முதுநிலை மருத்துவ மாணவர், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மத்திய டில்லி மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில், முதுநிலை மருத்துவம் முதலாம் ஆண்டு படித்தவர் அமித் குமார், 30.
நேற்று முன் தினம் மாலை, விடுதி அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அமித் குமார் ஏற்கனவே மனநலக் கோளாறுக்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும், தற்கொலைகான காரணம் குறித்து கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை எனவும் போலீசார் கூறினர். விசாரணை நடக்கிறது.

