ADDED : மே 04, 2024 10:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயலில் நாளை காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.
பெஸ்காம் செயற் பொறியாளர் ஹேமலதா விடுத்துள்ள அறிக்கை:
பெங்களூரு -- சென்னை எக்ஸ்பிரஸ் சாலை பணிக்காக, 66 கே.வி., மின் டவர் அமைக்கும் பணிகள், 6ம் தேதி நடக்கிறது. இதனால், தங்கவயலில் நாளை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. இதனால் பெமல் நகர், உரிகம் பேட்டை, கட்டகாமதேன ஹள்ளி, கம்மசந்திரா, ஐந்து விளக்கு பகுதி, சாம்பியன், மாரிகுப்பம், தொட்ட சின்னஹள்ளி, தொட்ட உலகமதி, அப்பேன ஹள்ளி, விருபாக் ஷிபுரம், பையட்ராயன ஹள்ளி, தொட்ட மாரஹள்ளி, போடகுர்கி ஆகிய பகுதிகளில், நாளை காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.