ADDED : ஜூலை 11, 2024 06:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைசூரு, : நடிகர் பிரபுதேவா பாட்டி புட்டம்மன்னி, 97, வயது மூப்பு காரணமாக நேற்று மரணமடைந்தார்.
தென்னிந்திய திரைப்படங்களில் நடன அமைப்பாளராக இருந்தவர் சுந்தரம். மைசூரு மாவட்டம், டி.நரசிபுராவின் முகுரு கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி மகாதேவம்மா.
இவர்களுக்கு ராஜு சுந்தரம், பிரபுதேவா, நாகேந்திரா என மூன்று மகன்கள். மூவரும் நடன இயக்குனர்கள், நடிகர்கள்.
மகாதேவம்மாவின் தாய் புட்டம்மன்னி, 97. மைசூரு தாலுகாவில் உள்ள கிராமத்தில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். தகவல் அறிந்த பிரபுதேவா, அவரது சகோதரர் நாகேந்திரா ஆகியோர் விமானம் மூலம் மைசூரு மண்டகள்ளி விமான நிலையம் வந்தடைந்தனர்.
அங்கிருந்து கார் மூலம், கிராமத்துக்குச் சென்றனர். நேற்றே புட்டம்மன்னிவின் இறுதிச்சடங்கு நடைபெற்றது.