தேசிய தேர்வு முகமை தலைவராக பிரதீப் சிங் கரோலா நியமனம்:நீட் முதுநிலை (pg) தேர்வு ஒத்திவைப்பு
தேசிய தேர்வு முகமை தலைவராக பிரதீப் சிங் கரோலா நியமனம்:நீட் முதுநிலை (pg) தேர்வு ஒத்திவைப்பு
UPDATED : ஜூன் 22, 2024 10:27 PM
ADDED : ஜூன் 22, 2024 09:49 PM

புதுடில்லி: நீட் மற்றும் நெட் தேர்வு முறைகேடுகளை தொடர்ந்து தேசிய தேர்வு முகமை தலைவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதிலும் நடைபெற்ற நீட் மற்றும் நெட் தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகளில் நிகழ்ந்ததை அடுத்து பெரும் பிரச்னையை எதிர்கொண்டது தேசிய தேர்வு முகமை.இது குறித்து பல்வேறு மாநிலங்களில் எதிர்கட்சிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
மேற்கண்ட தேர்வுகளில் நடந்த முறைகேடுகளை ஒப்புக்கொண்ட மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதனை அரசியலாக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருந்த சுபோத் குமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். தொடர்ந்து அப்பதவிக்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு தலைவருமான பிரதீப் சிங் கரோலா என்பவர் நியமனம் செய்யப்பட்டார்.
நீட் முதுநிலை (pg) தேர்வு ஒத்திவைப்பு
நாளை(23.06.2024) நடைபெற இருந்த நீட் முதுநிலை(pg) தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது
எம்.டி.,எம்எஸ்,முதுகலை டிப்ளமோ மருத்துவபடிப்புகளில் சேர்வதற்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. கடந்த 18-ம் தேதி தேர்வு எழுதுவற்கான ஹால் டிக்கெட் வெளியான நிலையில் தற்போது தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு நடைபெறும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும், மாணவர்களின் நலன் கருதி முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் முதுநிலை தேர்வின் செயல்முறைகளை மதிப்பீடு செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் தேசிய தேர்வு முகமை தேர்வு தலைவர் மாற்றப்பட்ட நிலையில் சுகாதாரதுறை அமைச்சகம் அதிரடியாக மேற்கண்ட உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.