ADDED : ஏப் 29, 2024 05:55 AM

ஹூப்பள்ளி : ''கர்நாடக மக்களை பசியால் அவதிப்பட மத்திய அரசு விடவில்லை,'' என பா.ஜ., வேட்பாளர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
ஹூப்பள்ளியில் நேற்று அவர் கூறியதாவது:
'கர்நாடகாவை பசியில்லா மாநிலமாக்குவோம், 10 கிலோ அரிசி கொடுப்போம்' என, அறிவித்த காங்கிரஸ் அரசு, மக்களை ஏமாற்றியது. ஆனால் உண்மையில் மக்களின் பசியை நீக்கியது, மத்திய அரசின் 'கரீப் கல்யாண்' திட்டம் தான்.
தற்போதைய வறட்சி சூழ்நிலையில், தார்வாட் தொகுதியில் மட்டும், 15 லட்சம் பயனாளிகளுக்கு, கரீப் கல்யாண் திட்டம் உதவியாக உள்ளது. பத்து கிலோ அரிசி கொடுப்பதாக உறுதியளித்த காங்கிரஸ் அரசு, அதேபோன்று அரிசி கொடுக்க வேண்டாமா? மக்களை பசியால் வாட, மத்திய அரசு விடவில்லை. ஏழைகளுக்காக உழைக்கும் நரேந்திர மோடியை, மீண்டும் பிரதமராக்க பா.ஜ.,வை பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்வர்.
இவ்வாறு அவர் கூறினார்.

