சி.பி.ஐ.,யிடம் பிரஜ்வல் வழக்கு பசவராஜ் பொம்மை வலியுறுத்தல்
சி.பி.ஐ.,யிடம் பிரஜ்வல் வழக்கு பசவராஜ் பொம்மை வலியுறுத்தல்
ADDED : மே 13, 2024 06:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: ''எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில், தலையிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் எஸ்.ஐ.டி., விசாரணை திசை மாறுகிறது,'' என முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டினார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில், பா.ஜ., தலையிடாது. இந்த வழக்கில் தகவல் கொடுத்தவர்களையே, கைது செய்கின்றனர். எஸ்.ஐ.டி., விசாரணை திசை மாறுகிறது.
சரியான விசாரணை நடக்க வேண்டுமானால், பென் டிரைவ் வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும்.
குற்றவாளிகளை எஸ்.ஐ.டி., அதிகாரிகள் கைது செய்யவில்லை. பாரபட்சமின்றி விசாரணை நடக்க வேண்டும். இந்த வழக்கில் யார், யாரின் பெயர்கள் கூறப்படுகிறதோ, அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும். எனவே சி.பி.ஐ., விசாரணைக்கு நாங்கள் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.