ADDED : மே 14, 2024 06:48 AM

பெங்களூரு: “பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு, தேசிய பிரச்னை அல்ல. அது தனிப்பட்ட விஷயம். போலீசார் விசாரணை நடத்துகின்றனர்,” என, பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
பிரஜ்வல் ரேவண்ணாவின் வழக்கு, தனிப்பட்ட விஷயம். இது தேசிய பிரச்னை அல்ல. இதை ஜேம்ஸ் பாண்ட் போன்று, உன்னிப்பாக ஆராயக் கூடாது. இந்த விஷயத்துக்கே, முக்கியத்துவம் தர முடியாது.
மாநிலத்தில் பல முக்கிய பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக குடிநீர் பிரச்னை, மக்களை வாட்டுகிறது. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்துகின்றனர். இது எங்கு போய் நிற்கிறது என, பார்க்கலாம். எஸ்.ஐ.டி., அதிகாரிகள் விசாரிக்கின்றனர். வெறும் குற்றச்சாட்டு எழுந்தால், ராஜினாமா கொடுக்க முடியுமா? வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

