பிரஜ்வல் ரேவண்ணா தாயார் பவானி ரேவண்ணா முன்ஜாமின் தள்ளுபடி
பிரஜ்வல் ரேவண்ணா தாயார் பவானி ரேவண்ணா முன்ஜாமின் தள்ளுபடி
UPDATED : மே 31, 2024 11:05 PM
ADDED : மே 31, 2024 11:03 PM

பெங்களூரு: பெண் கடத்தல் வழக்கில், கர்நாடகா மதசார்பற்ற ஜனதா தள கட்சி எம்.பி., பிரஜ்வல் தாயார் பவானி ரேவண்ணாவிற்கு முன்ஜாமின் வழங்க கோர்ட் மறுத்துவிட்டது.
கர்நாடகா மதசார்பற்ற ஜனதா தள எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் புகார், ஆபாசவீடியோ வைத்திருந்தது தொடர்பான வழக்கை கர்நாடக சிறப்பு புலனாய்வுக்குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் வெளிநாடு சென்று திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணாவை நேற்று நள்ளிரவு போலீசார் கைது செய்தனர். அவரது நீதிமன்ற காவல் ஜூன் 06-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மைசூர் மாவட்டம் கே.ஆர். நகரைச் சேர்ந்த பெண்ணை கடத்தியதாக பிரஜ்வல் ரேவண்ணாவின் தாயாரும், எச்.டி. ரேவண்ணா மனைவியுமான பவானி ரேவண்ணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கைதை தவிர்க்க பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் பவானி ரேவண்ணா முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜாமின் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தார். இதையடுத்து பவானி ரேவண்ணாவும் கைதாகலாம் என கூறப்படுகிறது.