பிரசன்ன லலிதாம்பிகா சமேத ராமலிங்கேஸ்வரர் பிரம்மோற்சவம்
பிரசன்ன லலிதாம்பிகா சமேத ராமலிங்கேஸ்வரர் பிரம்மோற்சவம்
ADDED : பிப் 24, 2025 05:10 AM
தங்கவயல்,: ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையில் ஸ்ரீ பிரசன்ன லலிதாம்பிகா சமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று பிரம்மோற்சவ விழா ஆரம்பமானது.
இக்கோவிலில் 1963 முதல் தொடர்ந்து பிரம்மோற்சவம் நடத்தி வருகின்றனர். 62 ம் ஆண்டு பிரம்மோற்சவம் நேற்று மாலை ஆரம்பமானது.
இரவில், 'நந்தி வாகன உற்சவம்' நடந்தது. கீதா சாலை, பிரிட்சர்ட் சாலை, சொர்ணா நகர் வழியாக வந்து கோவிலை அடைந்தது.
இன்றைய விழா, விஸ்வகர்மா சேவா அபிவிருத்தி சங்கம் சார்பில் நடக்கிறது.
காலையில் அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம், மஹா மங்களாரத்திக்கு பின், பிரசாத வினியோகம் நடக்கிறது. இரவில் சிம்ம வாகன உற்சவம் நடக்கிறது.
இம்மாதம் 25 ம் தேதி காலையில் கல்யாண உற்சவம், ரிஷப வாகன உற்சவம், கஜ வாகன உற்சவம்; 26ம் தேதி இரவில் மஹா சிவராத்திரி பூஜை, புஷ்ப அலங்காரம், ராவண சூரோத்சவம், ருத்ராபிஷேகம்;
27ம் தேதி தங்கவயல் பிராமணர் சங்கம் சார்பில் பிரம்ம ரத உற்சவம்; 28ம் தேதி சக்தி மாரியம்மன் கோவில் சார்பில் பார்வடோற்சவம்; மார்ச் 1ம் தேதி வசந்த உற்சவம், சந்திர பிரபா உற்சவம்; மார்ச் 2ம் தேதி புஷ்பயானோற்சவம்.
மார்ச் 3ம் தேதி தங்கவயல் கவுண்டர் சங்கம் சார்பில் ஹம்ச வாகன உற்சவம்.
மார்ச் 4ம் தேதி தங்கவயல் முதலியார் சங்கம் சார்பில் புஷ்ப பல்லக்கு; மார்ச் 5ம் தேதி சயன உற்சவம் நடக்கிறது. வாகன உற்சவம் அனைத்தும் இரவில் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் திருப்பணி ஒருங்கிணைப்பாளர் எம்.நாராயணசாமி சகோதரர்கள், அர்ச்சகர் சுப்ரமணிய குருக்கள் குடும்பத்தினர் செய்துள்ளனர்.

