ADDED : பிப் 22, 2025 09:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரோஹிணி:கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 65 வயதான பூசாரி உயிரிழந்தார்.
சூர்யா மந்திரில் நேற்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக பிரேம் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினருடன் போலீசாரும் விரைந்தனர்.
தீயை கட்டுப்படுத்திய பின், கோவில் பூசாரி பண்டிட் பன்வாரி லால் சர்மா, 65, படுகாயமடைந்து கிடப்பதை கண்டனர். அவரை மீட்டு, சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
அறைக்குள் செயல்படும் ஹீட்டரால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

