உறைவிட பள்ளியில் சமையல் கற்று கொடுத்த முதல்வர் சித்தராமையா
உறைவிட பள்ளியில் சமையல் கற்று கொடுத்த முதல்வர் சித்தராமையா
ADDED : ஜூலை 06, 2024 06:17 AM
சாம்ராஜ்பேட்: உறைவிட பள்ளியில், மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் சித்தராமையா, அங்கிருந்த சமையல் ஊழியருக்கு சமையல் கற்று கொடுத்தார்.
முதல்வர் சித்தராமையா, பெங்களூரின் விதான் சவுதாவில் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் சாம்ராஜ்பேட்டில் உள்ள, மொரார்ஜி தேசாய் உறைவிட பள்ளிக்கு திடீர் வருகை தந்து ஆய்வு செய்தார். இந்த பள்ளியில் 250 மாணவர்கள் படிக்கின்றனர்.
சிறிது நேரம் இவர்களுடன் விளையாடினார். இவர்களுக்கு ஆசிரியராக மாறினார். கன்னட பாடத்தில் சில கேள்விகளை கேட்டார். அதன்பின் மாணவர்களுடன் சேர்ந்து, மதிய உணவு சாப்பிட்டார். முதல்வரின் வலது புறம், இரண்டு மாணவியர் அமர்ந்திருந்தனர். இடது புறம் சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா அமர்ந்திருந்தார்.
சாப்பிட்டு முடிந்த பின், முதல்வர் சித்தராமையா, பள்ளியில் சமையல் செய்யும் பெண்ணை அழைத்தார்.
அவரிடம், 'அம்மா கேழ்வரகு களி, இன்னும் வெந்திருக்க வேண்டும். அதேபோன்று சாதத்தை கூட, இன்னும் கொஞ்சம் வேக வைத்தால் நன்றாக இருக்கும்' என ஆலோசனை கூறினார்.