ADDED : மே 07, 2024 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மங்களூரு : மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கைதி, தற்கொலை செய்து கொண்டார்.
தட்சிணகன்னடா, மங்களூரின், மஞ்சேஸ்வரா பந்த்யோடுவில் வசித்தவர் முகமது நவுபால், 24. போதைப்பொருள் விற்ற வழக்கில், 2022 டிசம்பரில் கைதானார். மங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
மன அழுத்தத்தால் அவதிப்பட்ட இவர், ஏப்ரல் 25ல் வென்லாக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று அதிகாலை மருத்துவமனை அறையின், இரும்பு கம்பியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மஞ்சேஸ்வரா போலீசார் விசாரிக்கின்றனர்.