ADDED : ஆக 03, 2024 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஜியாபாத்:உத்தர பிரதேசத்தின் காஜியாபாத் பிரகாஷ் விஹார் காலனியில் வசித்தவர் ஓம்வீர்,42. நொய்டா தனியார் நிறுவன ஊழியர். வீட்டின் மாடியில் நேற்று காலை துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. குடும்பத்தினர் சென்ற போது, ஓம்வீர் இறந்து கிடந்தார். அவர் கையில் துப்பாக்கி இருந்தது.
தகவல் அறிந்து போலீசார் வந்து உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் அங்கிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கைப்பற்றினர்.
ஓம்வீர் தந்தை அசோக் தோமர், “ஓம்வீருக்கும் பூனத்துக்கும் 21 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். மனைவியின் தொல்லையால்தான் ஓம்வீர் தற்கொலை செய்து கொண்டுள்ளான்,”என்றார்.
இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.