வீட்டுச்சுவரில் பாகிஸ்தான் ஆதரவு போஸ்டர்; சேட்டை வாலிபரை துாக்கியது டில்லி போலீஸ்!
வீட்டுச்சுவரில் பாகிஸ்தான் ஆதரவு போஸ்டர்; சேட்டை வாலிபரை துாக்கியது டில்லி போலீஸ்!
ADDED : ஆக 05, 2024 12:04 PM

டில்லி: பாகிஸ்தான் ஆதரவு போஸ்டர்களை சுவர்களில் ஒட்டியிருந்த வாலிபர், டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
டில்லியின் ரோகிணி பகுதியில் உள்ள அவந்திகா குடியிருப்பின் 'சி' பிளாக்கில் வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். அவர் தனது வீட்டின் சுவர்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவான போஸ்டர்களை ஒட்டி வந்துள்ளார். இது அங்கிருந்தவர்களிடையே சந்தேகங்களை எழுப்பியது.
இதனால், அந்தப் போஸ்டர்களை வீடியோ எடுத்த உள்ளூர் மக்கள், சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட நபரின் வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர்.
அங்கு வீட்டின் சுவர்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாசகங்களும், போஸ்டர்களும் ஒட்டப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், அந்த நபரை போலீசார் கைது செய்தனர். மேலும், அந்த நபருக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளதா என்று விசாரித்து வருகின்றனர். மேலும், பாகிஸ்தானுக்கு ஆதரவான பேனர்களையும் பறிமுதல் செய்தனர்.