வாக்குறுதி திட்டங்கள் உதவும்! காங்., ஆனந்தய்யா நம்பிக்கை
வாக்குறுதி திட்டங்கள் உதவும்! காங்., ஆனந்தய்யா நம்பிக்கை
ADDED : ஏப் 30, 2024 10:27 PM

ஹாவேரி : ''காங்கிரஸ் அரசின் வாக்குறுதித் திட்டங்கள், எனக்கு பக்கபலமாக உள்ளன. என் வெற்றி உறுதி,'' என, ஹாவேரி காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்தய்யா கட்டதேமடா தெரிவித்தார்.
ஹாவேரியில் நேற்று அவர் கூறியதாவது: எனக்கு அனைத்து சமுதாயத்தினரிடம் இருந்தும் ஆதரவு கிடைத்துள்ளது. தொகுதியில் ஏழு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். தொண்டர்களும் எனக்காக உழைக்கின்றனர். நானும் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்கிறேன்.
காங்கிரஸ் அரசின் வாக்குறுதித் திட்டங்கள், எனக்கு பக்கபலமாக உள்ளன. என் வெற்றி உறுதி. தொகுதியில் சிங்கடாலுார் ஏற்ற நீர்ப்பாசனம் உட்பட பல்வேறு திட்டங்கள் பல ஆண்டுகளாக பாக்கியுள்ளன. ஹிரேகெரூரில் குமுதவதி ஆற்றுக்கு குறுக்கே, தடுப்பணை கட்டும் திட்டமும் உள்ளது.
கதக் - யலவகி, ராணி பென்னுார் - ஷிவமொகா, முன்டரகி - ஹரபனஹள்ளி உட்பட பல இடங்களில் ரயில்வே திட்டங்கள் செயல்படுத்த வேண்டும். சர்க்கரை ஆலை, உணவு தானியங்கள் பதப்படுத்தும் மையங்கள் அமைப்பது என, பல திட்டங்களை செயல்படுத்தி, தொகுதியின் பொருளாதாரத்தை முன்னேற்ற உழைப்பேன்.
காங்கிரஸ் அரசின் வாக்குறுதித் திட்டங்கள் எனக்கு ஆதரவாக வேலை செய்யும். பெருமளவில் மக்கள் பயனடைந்துள்ளனர்; மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த திட்டங்கள் கிராமப்புற மக்களின் பணத்தை மிச்சப்படுத்துவதாக கருதுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
இத்தொகுதியில் தான் பா.ஜ.,வில் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை போட்டியிடுகிறார்.