பிரசவத்தில் தாய், குழந்தை பலி டாக்டரை கண்டித்து போராட்டம்
பிரசவத்தில் தாய், குழந்தை பலி டாக்டரை கண்டித்து போராட்டம்
ADDED : மே 02, 2024 06:48 AM
கொப்பால்: பிரசவத்தில் தாய், குழந்தை பலியாகினர். டாக்டரை கண்டித்து குடும்பத்தினர், உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
கொப்பால் குஷ்டகி விட்டலாபுரா கிராமத்தின் பசவராஜ், 25. இவரது மனைவி லட்சுமி, 20. நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் காலையில் பிரசவ வலி ஏற்பட்டது. தாவரகெரா கிராமத்தில் உள்ள சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு பிரசவம் நடந்தது. அப்போது லட்சுமி திடீரென இறந்தார்.
அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், லட்சுமிக்கு அறுவை சிகிச்சை செய்து, குழந்தையை வெளியே எடுத்தனர். ஆனால் குழந்தையும் இறந்துவிட்டது. டாக்டர் அலட்சியத்தால் தாயும், சேயும் இறந்ததாக மருத்துவமனை முன், குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்.
குஷ்டகி போலீசார் அங்கு சென்று பேச்சு நடத்தினர். தவறு செய்திருந்தால் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் போராட்டத்தை அவர்கள்கைவிட்டனர்.

