நீண்டு கொண்டே போகும் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல்: ஆக. 20 வரை நீட்டிப்பு
நீண்டு கொண்டே போகும் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல்: ஆக. 20 வரை நீட்டிப்பு
ADDED : ஆக 08, 2024 08:00 PM

புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் மீதான நீதிமன்ற காவல் ஆக.20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கை வழக்கில் முக்கிய குற்றவாளியாக டில்லி ஆம் ஆத்மி கட்சி முதல்வர் அரவிந்த் கெஜ்வால் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதில் நடந்துள்ள பணமோசடி வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறையால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து கடந்த ஜூன் 26-ம் தேதி திகார் சிறையில் வைத்து கெஜ்ரிவாலை கைது செய்தது. இது தொடர்பான வழக்குகள் டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சி.பி.ஐ. வழக்கில் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் நிறைவடைந்ததையடுத்து இன்று வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை வரும் ஆக.20-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி காவேரி பவேஜா ஒத்தி வைத்தார்.