ADDED : மார் 10, 2025 09:42 PM

மங்களூரு: கல்லுாரி மாணவர் மாயமான வழக்கில், குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் மீது குற்றச்சாட்டு கூறிய, பஜ்ரங் தள் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தட்சிண கன்னடா மாவட்டம், பன்ட்வால் தாலுகா, பரங்கிபேட் கிராமத்தின், பி.யு., கல்லுாரி மாணவர் திகந்த், கடந்த மாதம் 25ம் தேதி மாயமானார். போலீஸ் தேடிய நிலையில் 12 நாட்கள் கழித்து, உடுப்பியில் மீட்கப்பட்டார்.
திகந்த் காணாமல் போன நேரத்தில், ஹிந்து அமைப்பினர் சார்பில் பரங்கிபேட்டில் முழு அடைப்பு நடந்தது.
போராட்டத்தில் பேசிய தட்சிண கன்னடா மாவட்ட பஜ்ரங் தள் தலைவர் பாரத் கும்டலே, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மீது குற்றஞ்சாட்டி இருந்தார். இந்நிலையில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'பாரத் கும்டலே ரத்தம் இந்த பூமியில் சிந்தும் வரை, நாங்கள் திருப்தி அடையமாட்டோம்.
எங்கள் சமூகத்தை குறிவைக்கிறார். அவரை நாங்கள் சும்மா விடமாட்டோம். திகந்த்தை கண்டுபிடித்த காவல் துறைக்கு எங்கள் வாழ்த்துக்கள்' என,பதிவிட்டுள்ளார்.