sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பி.யு.சி., 2வது தேர்வு அட்டவணை வெளியீடு

/

பி.யு.சி., 2வது தேர்வு அட்டவணை வெளியீடு

பி.யு.சி., 2வது தேர்வு அட்டவணை வெளியீடு

பி.யு.சி., 2வது தேர்வு அட்டவணை வெளியீடு


ADDED : ஏப் 12, 2024 05:28 AM

Google News

ADDED : ஏப் 12, 2024 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பி.யு.சி., இரண்டாம் ஆண்டின், இரண்டாவது தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பி.யு.சி., இரண்டாம் ஆண்டுக்கு 2023 - 24ம் கல்வி ஆண்டு முதலே, ஆண்டுக்கு மூன்று பொதுத்தேர்வு நடத்துவதற்கு பள்ளி கல்வித் துறை தீர்மானித்தது.

இதன்படி, முதல் தேர்வு மார்ச் 1ம் தேதி முதல், 22ம் தேதி வரை நடந்தது. முடிவுகளும் நேற்று முன்தினம் வெளியானது. இதில், 81.15 சதவீதம் மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றனர். 1.23 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.

இதையடுத்து, இரண்டாவது தேர்வு, வரும் 29ம் தேதி முதல் மே 16ம் தேதி வரை நடக்கிறது. தேர்ச்சி பெற்றவர்கள், அதிகமான மதிப்பெண் கிடைக்க வேண்டும் என்று கருதி மீண்டும் எழுதலாம். தேர்ச்சி பெறாதவர்களும் எழுதலாம்.

தேர்வு அட்டவணை

29.04.2024 கன்னடம், அரபு

30.04.2024 வரலாறு, இயற்பியல்

02.05.2024 ஆங்கிலம்

03.05.2024 அரசியல் அறிவியல், புள்ளியியல்

04.05.2024 புவியியல், உளவியல், வேதியியல், ஹோம் சைன்ஸ், அடிப்படை கணிதம்

09.05.2024 லாஜிக், வணிக ஆய்வுகள், கணிதவியல், கல்வி

11.05.2024 சமூகவியல், உயிரியல், நிலவியல், எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல்

13.05.2024 பொருளாதாரம்

14.05.2024 விருப்ப கன்னடம், கணக்கியல்

15.05.2024 ஹிந்தி

16.05.2024 காலை - தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, உருது, சமஸ்கிருதம், பிரெஞ்சு; மதியம் - ஹிந்துஸ்தானி சங்கீதம், தகவல் தொழில்நுட்பம், சில்லரை, ஆட்டோ மொபைல், அழகு மற்றும் ஆரோக்கியம்






      Dinamalar
      Follow us