
அரசுக்கு கிடுக்கி!
கர்நாடகா காங்கிரஸ் அரசு கோரிக்கை விடுத்தும், பிரஜ்வலின் பாஸ்போர்ட்டை, மத்திய அரசு ரத்து செய்யவில்லை என்று கூறி வருகின்றனர். பென்டிரைவ் வழக்கை முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் ஆகியோர் சாதாரணமாக எடுத்து கொண்டுள்ளது கவலை அளிக்கிறது. இதை, சி.பி.ஐ., விசாரணைக்கு, மாநில அரசு ஏன் ஒப்படைக்கவில்லை. கர்நாடகா வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கொலை, பாலியல் பலாத்காரம் நடந்து வருகின்றன. மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
கே.எஸ்.ஈஸ்வரப்பா
முன்னாள் அமைச்சர்
கூறியது தவறு!
பிரஜ்வல் பாஸ்போர்ட்டை இரண்டு நாட்களில் ரத்து செய்வதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக மே 1ம் தேதி, மத்திய அரசுக்கு, முதல்வர் கடிதம் எழுதினார். இதற்கு பதில் வரவில்லை. ஆனால், தற்போது தான் கிடைத்ததாக வெளியுறவு அமைச்சர் கூறியது தவறு. பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவர்கள் பயப்பட வேண்டாம். அவர்களை யாரும் கட்டாயப்படுத்த மாட்டார்கள். அவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க மண்டல ஐ.ஜி.பி.,க்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஜி.பரமேஸ்வர்
உள்துறை அமைச்சர்

