ஓட்டுக்காக புல்வாமா தாக்குதல் காங்., சீனிவாஸ் குற்றச்சாட்டு
ஓட்டுக்காக புல்வாமா தாக்குதல் காங்., சீனிவாஸ் குற்றச்சாட்டு
ADDED : ஏப் 05, 2024 11:11 PM

துமகூரு: ''லோக்சபா தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, ஜம்மு - காஷ்மீரில் புல்வாமா தாக்குதல் நடத்தியது,'' என, குப்பி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சீனிவாஸ் குற்றம் சாட்டினார்.
துமகூரில் நேற்று அவர் கூறியதாவது:
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில், நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய பா.ஜ., அரசு ஜம்மு - காஷ்மீரில், புல்வாமா தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான், இந்தியா மீது தாக்குதல் நடத்தும் என்ற பீதியை, வாக்காளர்களிடம் ஏற்படுத்தினர். இம்முறை ராமர் பெயரில் ஓட்டு கேட்கின்றனர்.
கிராமங்களில் இளைஞர்களை, 'ஜெய் ஸ்ரீராம்' என, கோஷமிடும்படி துாண்டி விடுகின்றனர்.
புல்வாமா தாக்குதலில், யாரையும் பிடித்துத் தண்டிக்க முடியவில்லை என, பா.ஜ.,வினரே கூறுகின்றனர்.
பா.ஜ.,வினர் ஓட்டுக்காக முஸ்லிம்கள் மற்றும் பாகிஸ்தான் பெயரை பயன்படுத்துகின்றனர்.
பகவான் ராமரை பூஜிப்பதை, நான் எதிர்க்கவில்லை. ஆனால் ஜெய் ஸ்ரீராம் என, கோஷமிடுவதால் காலி வயிற்றை நிரப்ப முடியாது.
சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு செயல்படுத்திய ஐந்து வாக்குறுதித் திட்டங்கள், பெண்கள், இளைஞர்கள் உட்பட, பலருக்கு உதவி செய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
