ADDED : ஏப் 24, 2024 08:24 AM

ஹாசன், : 'எம்.பி., ஆன பின்னர் சரியாக வேலை செய்யவில்லை என்றால், எனக்கு தண்டனை கொடுங்கள்,'' என, ஹாசன் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயஷ் படேல் கூறி உள்ளார்.
ஹாசனில் நேற்று ஸ்ரேயஷ் படேல் அளித்த பேட்டி:
காங்கிரஸ் அரசின் ஐந்து வாக்குறுதிகளுக்கு, மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. மக்கள் இம்முறை மாற்றத்தை விரும்புகின்றனர். எனது குடும்பத்திற்கு அரசியல் ரீதியாக இழைக்கப்பட்ட அநீதியை, மக்கள் முன்பு கொண்டு செல்கிறேன். ஹாசன் காங்கிரசில் சிறு, சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தன. அதை சரி செய்து உள்ளோம்.
ஹாசன் தொகுதி காங்கிரஸ் எம்.பி.,க்களாக இருந்த எனது தாத்தா புட்டசாமி கவுடா, நஞ்சேகவுடா, ஸ்ரீகண்டய்யா ஆகியோர், மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அடித்தளம் அமைத்தனர். ஆனால் ம.ஜ.த., - எம்.பி.,க்கள் இதுவரை ஒரு வளர்ச்சிப் பணியும் செய்யவில்லை.
கடந்த முறை ம.ஜ.த.,வுடன் கூட்டணி வைத்ததால் தோற்றோம். இந்த முறை பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துள்ளனர். பா.ஜ.,வின் நிலை என்ன ஆக போகிறது என்று தெரியவில்லை.
நான் எம்.பி.,யானால் ஹாசன் மாவட்டத்தின் முக்கிய பிரச்னையான, வனவிலங்கு - மனித மோதலுக்கு தீர்வு காண்பேன். எனது தாத்தா தேவகவுடாவை தோற்கடித்தவர். அவரது பாணியில் தேவகவுடா குடும்பத்தின், பிரஜ்வலை தோற்கடிப்பேன். எம்.பி., ஆன பின்னர் சரியாக வேலை செய்யவில்லை என்றால், எனக்கு தண்டனை கொடுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

