ADDED : ஆக 16, 2024 10:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்ரம் நகர்:டில்லியின் முன்னாள் துணை முதல்வரும் ஆம் ஆத்மியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியாவை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நேற்று டில்லியில் சந்தித்தார்.
கலால் கொள்கை வழக்கில் மணீஷ் சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்த அவருக்கு கடந்த 9ம் தேதி உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அன்றே அவர் வெளியே வந்தார். அதன் பிறகு, சிசோடியாவை பகவந்த் மான் சந்திப்பது இதுவே முதல் முறை.
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதான வழக்கு, கட்சி நலன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியானது.

