பஞ்சாப் ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ. 50 லட்சம் பரிசு: பகவந்த்
பஞ்சாப் ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ. 50 லட்சம் பரிசு: பகவந்த்
ADDED : ஆக 08, 2024 08:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமிர்சரஸ்: ஒலிம்பிக்கில் வென்ற பஞ்சாப் ஹாக்கியில் வீரர்களுக்கு தலா ரூ. 50 லட்சம் பரிசு அறிவித்துள்ளது பஞ்சாப் அரசு.
ஒலிம்பிக் ஹாக்கியில் ஸ்பெயினை வீழ்த்தி இந்தியா வெண்கலம் வென்றது. இதற்கு நாடு முழுதும் அரசியல் தலைவர்கள், பிரபலங்களின் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்திய ஹாக்கி அணிக்கு பஞ்சாப்பை சேர்ந்த ஹர்மன்ப்ரீத்சிங் கேப்டனாக அபராமாக ஆடி வெற்றியை தேடி தந்தார்.
இதையடுத்து பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த்சிங் மான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒலிம்பிக் இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்ற பஞ்சாப் வீரர்களுக்கு விளையாட்டு விதிகளின் படி தலா ரூ. 50 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்றார்.