ADDED : மார் 12, 2025 05:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மங்களூரு; ராணி என்ற புலி இரண்டு குட்டிகளை ஈன்றதன் மூலம், தன் வாழ்நாளில் பத்து குட்டிகளை ஈன்றுள்ளது.
மங்களூரில் உள்ள பிலிகுலா மிருகக்காட்சி சாலை மிகவும் பிரபலமானது. இதில் பல விலங்குகள் இருந்தாலும், இங்குள்ள புலிகளை பார்ப்பதற்காகவே பார்வையாளர்கள் வருகை தருகின்றனர்.
பன்னட்கட்டாவில் இருந்து, ராணி எனும் புலி 2016ல், இங்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, ஒரே நேரத்தில் 5 குட்டிகளை ஈன்றது. இது ஒரு சாதனையாக கருதப்பட்டது.
இதன் பின், 2021ல், மூன்று குட்டிகளை ஈன்றது. தற்போது, இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த குட்டிகளின் உடல் நிலை நன்றாக உள்ளது. கூடிய விரைவில் பார்வையாளர்கள் பார்க்கலாம் என வனத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.