ADDED : ஆக 16, 2024 06:42 AM
ராய்ச்சூர்: மந்த்ராலயாவின், ராகவேந்திர சுவாமிகளின் ஆராதனை மஹோற்சவத்தில் பங்கேற்க, முதல்வர் சித்தராமையா பங்கேற்கிறார்.
மந்த்ராலயா மடத்தின் மடாதிபதி சுபுதேந்திர தீர்த்தரு கூறியதாவது:
மந்த்ராலயாவின் ராகவேந்திர சுவாமிகளின் 353வது ஆராதனா மஹோற்சவம் வரும் 18 முதல் 24 வரை நடக்க உள்ளது.
முதன் முறையாக, கர்நாடக முதல்வர் சித்தராமையா, வரும் 19ல், மந்த்ராலயா மடத்துக்கு வருகிறார்.
வெவ்வேறு துறைகளில் சாதனை செய்த நால்வருக்கு, மந்த்ராலயா ராகவேந்திராவின் 'அனுகிரஹா' விருது வழங்கி கவுரவிக்கப்படுவர்.
பெங்களூரின் பி.ஜி.எஸ்., மற்றும் எஸ்.ஜெ.பி.ஐ.டி., குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் பிரகாஷ்நாத் சுவாமிகள், பெங்களூரின் வித்வான் ரகுபதி உபாத்யாயா, வாரணாசியின் பேராசிரியர் வரஜா பூஷண ஓஜா, மைசூரு எம்.பி., யதுவீர் ஆகியோருக்கு விருது வழங்கப்படும்.
ஆகஸ்ட் 20ல், குருராயரின் பூர்வாராதனை, 21ல் மத்யாராதனை, 22ல் உத்தராராதனை மஹா ரத உற்சவங்கள் நடக்கும். வரும் 18ல் திருப்பதி - திருமலை கோவிலில் இருந்து, சீனிவாச சுவாமியின் சேஷ வஸ்திரங்கள் வருகின்றன.
மத்திய அமைச்சர்கள் குமாரசாமி, சோமண்ணா, ஷோபாவும் மந்த்ராலா வருகின்றனர். இன்போசிஸ் அறக்கட்டளையின் சுதா மூர்த்தி, ஐந்து நாட்களும் மடத்திலேயே தங்கி, ஆராதனை மஹோற்சவத்தில் பங்கேற்பார். துங்கபத்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்பு நடவடிக்கையுடன், பக்தர்கள் புனித நீராட ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

