UPDATED : ஜூன் 26, 2024 06:10 PM
ADDED : ஜூன் 25, 2024 09:52 PM

புதுடில்லி: லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் எம்.பி., ராகுல் இன்று தேர்வு செய்யப்பட்டார்.
லோக்சபா சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதில் இண்டியா கூட்டணி சார்பில் கொடிகுனில் சுரேஷ் , பா.ஜ., சார்பில் ஓம் பிர்லா போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் இண்டியா கூட்டணி கட்சி கூட்டம் டில்லியில் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் நடந்தது. இதில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக ராகுல் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து துணை சபாநாயகர் தேர்தலிலும் வேட்பாளரை நிறுத்த இண்டியா கூட்டணி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்டாலின் வாழ்த்து
லோக்சபா எதிர்கட்சி தலைவராக தேர்வாகி உள்ள ராகுலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். லோக்சபாவில் ராகுலின் குரல் தொடர்ந்து பலமாக ஒலிக்கட்டும் என வாழ்த்தியுள்ளார் முதல்வர்.