கட்சிக்கு நீங்களே முதுகெலும்பு தொண்டர்களிடம் ராகுல் உருக்கம்
கட்சிக்கு நீங்களே முதுகெலும்பு தொண்டர்களிடம் ராகுல் உருக்கம்
ADDED : ஏப் 19, 2024 01:24 AM
புதுடில்லி, நாடு முழுதும் 102 லோக்சபா தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி., ராகுல், தன் சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுஉள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
எங்கள் கட்சியின் முதுகெலும்பு தொண்டர்களாகிய நீங்கள் தான். தேர்தல் நேரம் என்பதால் உங்களிடம் நேரடியாக பேச வேண்டும் என நினைத்தேன்.
இது சாதாரண தேர்தல் அல்ல; அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றும் தேர்தல். இதில் சிங்கம் உள்ளம் உடைய உங்களை போன்றவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது.
காங்கிரசின் சிந்தனையும், சித்தாந்தமும் உங்களுக்குள் பதிந்திருப்பதால், அது உங்கள் நரம்புகளில் உள்ளது. இந்தியாவின் யோசனையையும், அரசியல் சாசனத்தையும் பா.ஜ., அழித்து வருவதை மக்களிடம் நீங்கள் எடுத்து சொல்லுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

