அரசியலமைப்பு புத்தகத்துடன் எம்.பி.,யாக பதவியேற்ற ராகுல்
அரசியலமைப்பு புத்தகத்துடன் எம்.பி.,யாக பதவியேற்ற ராகுல்
ADDED : ஜூன் 26, 2024 01:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லோக்சபா தேர்தலில், கேரளாவின் வயநாடு, உ.பி.,யின் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல், இரு தொகுதிகளிலும் வென்றார்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, ஒரு தொகுதியின் எம்.பி.,யாக மட்டுமே இருக்க முடியும் என்பதால், வயநாடு எம்.பி., பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், லோக்சபாவில் நேற்று, அரசியலமைப்பு புத்தகத்தை கையில் வைத்தபடி, எம்.பி.,யாக ராகுல் பதவியேற்றார். அப்போது, காங்., - எம்.பி.,க்கள், 'பாரத் ஜோடோ' என, அவருக்கு ஆதரவாக முழக்கமிட்டனர். எதிர்க்கட்சிகளின் 'இண்டியா' கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் பலரும், அரசியலமைப்பு புத்தகத்தை கையில் வைத்தபடி நேற்று பதவியேற்றனர்.
உத்தர பிரதேச பா.ஜ., -- எம்.பி., சத்ரபால் சிங் பதவி ஏற்றபோது, 'ஜெய் ஹிந்து ராஷ்டிரா' என கோஷமிட்டார்.