ADDED : ஜூலை 26, 2024 09:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லக்னோ: அவதூறு வழக்கில் ஆஜராக உத்தரப் பிரதேசம் வந்திருந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், செருப்பு தைக்கும் தொழிலாளி கடைக்கு சென்றார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதற்காக ராகுல் மீது சுல்தான்பூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று (26.07.2024) ஆஜரானார். விசாரணை ஆக 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
முன்னதாக சுல்தான் பூர் செல்லும் வழியில் செருப்பு தைக்கும் தொழிலாளியின் கடைக்கு திடீரென விஜயம் செய்து அங்கிருந்த கடை உரிமையாளரான முதியவரிடம் நலம் விசாரித்தார். சுமார் 30 நிமிடங்கள் கலந்துரையாடினார்.