துணை கலெக்டரை தாக்கிய சுயேச்சை வேட்பாளர் கைது; வன்முறையில் ஈடுபட்ட ஆதரவாளர்கள்
துணை கலெக்டரை தாக்கிய சுயேச்சை வேட்பாளர் கைது; வன்முறையில் ஈடுபட்ட ஆதரவாளர்கள்
UPDATED : நவ 14, 2024 03:36 PM
ADDED : நவ 14, 2024 03:28 PM

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தேர்தல் பணியில் இருந்த துணை கலெக்டரை சுயேச்சை வேட்பாளர் கன்னத்தில் அறைந்தார். அவரை கைது செய்ய போலீசார் முயன்ற போது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தனர். அதிவிரைவுப்படையினர் வரவழைக்கப்பட்டு கடும் போராட்டத்திற்கு பிறகு அவரை போலீசார் கைது செய்தனர்.
தாக்குதல்
விளக்கம்
இதற்கு காரணம் கூறிய நரேஷ் மீனா, '' ஓட்டுச்சாவடியில் கள்ள ஓட்டு போடப்பட்டது. பா.ஜ., வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என அதிகாரிகள் அனைவரும் பணியாற்றுகின்றனர். பா.ஜ.,வுக்கு ஓட்டுப்போட நெருக்கடி கொடுக்கின்றனர். அமித் சவுத்ரி தவறு செய்ததால் தான் அவரை அறைந்தேன்.'' என்றார்.
போலீசார் அளித்த விளக்கத்தில், '' கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். அவர்களுடன் அமித்சவுத்ரி உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவரை நரேஷ்மீனா கன்னத்தில் அறைந்ததாக'' தெரிவித்தனர்.
போராட்டம்
நரேஷ் மீனா மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் குதிப்போம் என ராஜஸ்தான் மாநில அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து நேற்று இரவு நரேஷ் மீனாவை போலீசார் கைது செய்ய முயற்சித்தனர். ஆனால், அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது வன்முறையாக மாறியது. வன்முறை ஏற்பட்டதுடன், கல்வீசி தாக்குதல் நடத்தி பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டை வீசினர். இந்த மோதலில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 60 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
குவிப்பு
இந்நிலையில் இன்று காலை ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய நரேஷ் மீனா, 'நான் போலீசில் சரணடைய மாட்டேன்' என்றார். மேலும் போலீசை சுற்றிவளைக்குமாறு ஆதரவாளர்களை தூண்டிவிட்டார்.
காங்., கண்டனம்
இந்நிலையில், அம்மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக குற்றம்சாட்டி உள்ளது.