ADDED : ஏப் 07, 2024 12:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பா.ஜ., தேசிய தலைவர் நட்டா உட்பட ஐந்து பேர் நேற்று ராஜ்யசபா எம்.பி.,க்களாக பதவியேற்றனர்.
சமீபத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ., தலைவர் நட்டா, குஜராத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டார்.
பார்லிமென்டில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான ஜக்தீப் தன்கர், அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அவரைத் தொடர்ந்து, பல்வேறு மாநில சட்டசபைகளில் இருந்து புதிதாக தேர்வு செய்யப்பட்ட அசோக் சவான், சன்னிலால் கராசியா, அனில் குமார் யாதவ் மண்டாடி, சுஷ்மிதா தேவ், முகமது நாதிமுல் ஹக்கி ஆகியோரும் நேற்று பதவியேற்றனர்.

