sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ராமர் கோவில் அறக்கட்டளை தலைவர் 'அட்மிட்'

/

ராமர் கோவில் அறக்கட்டளை தலைவர் 'அட்மிட்'

ராமர் கோவில் அறக்கட்டளை தலைவர் 'அட்மிட்'

ராமர் கோவில் அறக்கட்டளை தலைவர் 'அட்மிட்'


ADDED : செப் 10, 2024 01:26 AM

Google News

ADDED : செப் 10, 2024 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்கு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்தஷேத்ர அறக்கட்டளை சார்பில் பிரமாண்டமான கோவில் கட்டப்பட்டது.

இந்த கோவிலில் கடந்த ஜனவரியில் பாலராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. இரண்டு மற்றும் மூன்றாம் தளங்களில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை தலைவர் மஹந்த் ந்ருத்ய கோபால் தாஸ், 86, உடல்நிலை சமீபத்தில் பாதிக்கப்பட்டது.

சிறுநீரக பாதிப்பு காரணமாக மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் லக்னோவில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால், அவருக்கு டாக்டர் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us