விண்வெளியில் இருந்து 'ராமர் பாலம்' ‛கிளிக்'': ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்ட படம் வைரல்
விண்வெளியில் இருந்து 'ராமர் பாலம்' ‛கிளிக்'': ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்ட படம் வைரல்
ADDED : ஜூன் 24, 2024 05:24 PM

புதுடில்லி: விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட, இந்தியா - இலங்கை இடையிலான ராமர் பாலத்தின் படத்தை ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்டது. இந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியா - இலங்கை இடையே, கடலுக்கடியில் 48 கிலோ மீட்டர் தொலைவுக்கு, இந்தியாவின் தென்கிழக்குத் தீவுப்பகுதியான ராமேஸ்வரம் தீவிலிருந்து, இலங்கையின் மன்னார் தீவுப்பகுதிக்கு இடையே ராமர் பாலம் அமைந்துள்ளது.
ராமர் பாலத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் கோப்பர்நிக்கஸ் சென்டினெல் - 2 செயற்கைக்கோள் புகைப்படம் எடுத்து ஆய்வு மையத்துக்கு அனுப்பியிருக்கிறது. இந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்டது.
ராமர் பாலத்தில் இருக்கும் மண் அமைப்புகள் உலர்ந்து காணப்படுகிறது. இங்கு கடலின் ஆழமே ஒன்று முதல் 10 மீட்டர் வரை தான் உள்ளது என ஐரோப்பிய ஏஜென்சி தெரிவித்துள்ளது.