'ராமேஸ்வரம் கபே' குண்டுவெடிப்பு: கர்நாடகாவில் என்.ஐ.ஏ., சோதனை
'ராமேஸ்வரம் கபே' குண்டுவெடிப்பு: கர்நாடகாவில் என்.ஐ.ஏ., சோதனை
ADDED : மார் 28, 2024 05:22 AM
பெங்களூரு : 'ராமேஸ்வரம் கபே' குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, பெங்களூரு, தீர்த்தஹள்ளியில் என்.ஐ.ஏ., அதிகாரிகள், நேற்று சோதனை நடத்தினர்.
பெங்களூரு 'ராமேஸ்வரம் கபே' ஹோட்டலில், கடந்த 1ம் தேதி மதியம் குண்டு வெடித்தது. ஊழியர்கள் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை என்.ஐ.ஏ., விசாரித்து வருகிறது. குண்டுவெடிப்பை நடத்தியது ஷிவமொகாவின் தீர்த்தஹள்ளியை சேர்ந்த, முஸவீர் ஹுசைன் ஷாகிப், அப்துல் மாத்ரின் தாஹா என்பது தெரிந்தது.
நேற்று முன்தினம் சந்தேகத்தின்பேரில், இருவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் குண்டுவெடிப்பு தொடர்பாக, பெங்களூரு குரப்பனபாளையாவில் இரண்டு இடங்கள், ஷிவமொகா தீர்த்தஹள்ளியில் இரண்டு இடங்கள், ஹூப்பள்ளி ஒரு இடம் என, ஐந்து இடங்களில் நேற்று என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். முஸவீர் ஹுசைன் ஷாகிப், அப்துல் மாத்ரின் தாஹா குடும்பத்தினரிடம் விசாரணை நடைபெற்றது.