75 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடு தேடி வரும் ரேஷன் பொருள்
75 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடு தேடி வரும் ரேஷன் பொருள்
ADDED : மார் 08, 2025 02:13 AM
* கர்நாடகாவை பசியில்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதற்காக 'அன்னபாக்யா' திட்டத்தின் கீழ் 10 கிலோ இலவச அரிசி வழங்குகிறோம். இதன் மூலம் 4.21 கோடி மக்கள் பயன் அடைகின்றனர்.
* மொத்த விற்பனை கிடங்கில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவவும், உணவு பொருட்களை ரேஷன் கடைகளுக்கு எடுத்து செல்லும், வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தி கண்காணிக்கவும், கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கவும் 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* கடந்த ஆண்டு 'அன்ன சுவிதா' திட்டத்தை அறிமுகப்படுத்தி, 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு, வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வினியோகித்தோம். இந்த திட்டத்தில் 2 லட்சம் பேர் பயன் அடைந்தனர். இந்த ஆண்டு முதல் 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு, வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வினியோகிக்க உள்ளோம். இதன் மூலம் 3.30 லட்சம் பேர் பயன் அடைவர்.
* ரேஷன் கடைகளில் உள்ள எடை இயந்திரத்தை திறம்பட கண்காணிக்க, பொது வினியோக முறை தகவல் தொழில்நுட்ப அமைப்புடன் ஒருங்கிணைக்கப்படும்.
* அன்னபாக்யா திட்டத்தின் கீழ் மொத்த விற்பனை லாபம், ஒரு குவிண்டாலுக்கு 35 ரூபாயில் இருந்து 45 ரூபாயாக உயர்த்தப்படும்.
* தேவைப்படும் இடங்களில் புதிய ரேஷன் கடைகள் துவங்கப்படும். எஸ்.சி., - எஸ்.டி., சமூக மக்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும்.