விமான நிலையத்தில் கூரை சரிந்த முனையம் 17ல் மீண்டும் திறப்பு
விமான நிலையத்தில் கூரை சரிந்த முனையம் 17ல் மீண்டும் திறப்பு
ADDED : ஆக 14, 2024 08:25 PM

புதுடில்லி:டில்லி விமான நிலைய டி-1 முனையம் நாளை மறுநாள் முதல் மீண்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டில்லி சர்வதேச விமான நிலையத்தின் டி-1 முனையத்தில் ஜூன் மாத இறுதியில் கூரை சரிந்து விழுந்தது. இதையடுத்து அந்த முனையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு மூடப்பட்டது.
சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வரும் 17ம் தேதி முதல் டி-1 முனையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படும் என டில்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் அறிவித்துள்ளது.
இந்த முனையத்தில் இருந்து 17ம் தேதி முதல் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 13 விமானங்களும் இண்டிகோ நிறுவனத்தின் 34 விமானங்களும் இயக்கப்படுகிறது.
டி-1 முனையம் கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்டது. ஆனால், ஜூன் மாத இறுதியில் அங்கு கூரை இடிந்து விழுந்தது. டில்லி விமான நிலையத்தில் டி-1, டி-2 மற்றும் டி-3 ஆகிய மூன்று முனையங்கள் உள்ளன.